ஐதராபாத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 33ஆவது லீக் போட்டி நடைபெற்றது.
மேலும் இப்போட்டியில், சென்னை அணியில் டோனி விளையாடாத காரணத்தினால் சுரேஷ் ரெய்னா அணித்தலைவராகச் செயல்பட்டார்.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை அணியில் அதிகபட்சமாக டு பிளிஸ்சிஸ் 45 (31) ரன்கள், ஷேன் வாட்சன் 31 (29) ரன்கள், அம்பத்தி ராயுடு 25 (21) ரன்கள் எடுத்தனர்.
ஐதராபாத் அணியில், ரஷீத் கான் 2 விக்கெட் மற்றும் கலீல் அகமது, நதீம், விஜய் சங்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஐதராபாத் அணி 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 50(25) மற்றும் பாரிஸ்டோ 61(44) ரன்கள் குவித்து அதிரடி துவக்கத்தை அளித்தனர்.
இதன் காரணமாக ஆட்டத்தின் 16.5-வது பந்திலேயே ஐதராபாத் வெற்றி இலக்கை எட்டியது.
4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் குவித்த ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. சென்னை தொடர்ந்து 14 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.