வணக்கம் ரஜினி சார், இதெல்லாம் ஒரு பொழப்பா சார்?

ஏப்ரல் 9 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு திட்டம் இடம் பெற்றுள்ளது குறித்துக் கூறும்போது,

இது ரொம்ப நல்ல விஷயம். எல்லோரும் இதை வரவேற்று இருக்கிறார்கள். நான் ரொம்ப நாளாக நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

மறைந்த வாஜ்பாயின் கனவும் அதுவாகத் தான் இருந்தது. அவர் பிரதமராக இருந்தபோது அவரைச் சந்தித்து இது பற்றி நான் சொல்லியிருந்தேன். இந்தத் திட்டத்திற்கு பகீரதயோஜனா என்று பெயர் வையுங்கள் என்று சொல்லியிருந்தேன். பகீரதம் என்றால், செய்ய முடியாததைச் செய்வது தான் இதன் பொருள்.

இப்போது இந்தத் திட்டத்தை பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைக்கிறோம், அதற்கு ஒரு ஆணையத்தை உருவாக்குவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. ஆண்டவன் ஆசீர்வாதத்தால், மக்களின் தயவால், என்ன முடிவு வரப்போகிறது என்பது தெரியாது, தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க.) மத்தியில் ஆட்சி அமைத்தால் முதலில் இந்த நாட்டுடைய நதிகளை இணைக்க வேண்டும்

இவ்வாறு ரஜினி கூறியிருந்தார்.

இதற்கு கடும் விமர்சனங்கள் வருகின்றன. அவற்றில் ஒன்று, திரைப்பட இயக்குநர் வீரசிங்கம் எழுதியது…..

வணக்கம் ரஜினி சார்!

இதெல்லாம் ஒரு பொழப்பா சார்…!?
தமிழ் மக்கள லேசுல
எடை போட்டுடாதீங்க..!

வாங்கிக் கட்டுனதெல்லாம்
பத்தாதா.?

கமலஹாசன் சார் ஆம்பள சிங்கம்.!
கட்சி ஆரம்பிச்சாரு..
தைரியமா தேர்தல் களத்துல இறங்கி
மக்கள தெனமும் சந்திச்சிக்கிட்டுருக்கார்..!

அவர் ஜெயிச்சாலும் மரியாதைக்குரியவர்..
தோற்றாலும்
மரியாதைக்குரியவர்தான்..!

நீங்க கடைசிவரைக்கும்
தமிழ் மக்கள ஏமாத்திக்கிட்டே
பொழப்ப ஓட்டிக்கிட்டு
போயிடலாம்னு பாக்குறீங்களா?

தமிழ் மக்கள் ரொம்ப பொருமைசாலிங்க..
அவங்கள ஏமாத்துறவங்கள
பழி வாங்காம விடமாட்டாங்க!

தமிழ் மக்களுக்கு துரோகம் செஞ்சவங்களுக்கு எவ்வளவு
கொடுமையான முடிவுகள் நடந்துருக்குனு எல்லாருக்குமே
தெரியும்..!

ஒவ்வொரு தேர்தல் ஆரம்பிக்கும்பொழுதும்
ஒவ்வொரு அறிக்கை விடுறது..
அதுக்கு நீங்க ஆதரவு தெரிவிக்கிறது..!

நதிநீர் இணைப்புப் பற்றி
வாஜ்பேய்க்கிட்ட பேசின நீங்க … அந்த பகீரத யோஜனாவப் பற்றி
இப்ப ஐந்து ஆண்டுகளா ஆட்சில
இருக்குற மோடி கிட்ட ஏன் பேசல.?

ஆமா..
கடைசியா ஒரு கேள்வி கேட்குறேன்..
நீங்க யாரு சார்?

ஏதோ.. நீங்க சொன்னா.. ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் உங்க பேச்சத் தட்டாம கேட்குறமாதிரி ஒரு நெனப்புல இருக்கீங்களே..
அந்த காலமெல்லாம்
மலையேறிப் போச்சு சார்.

இப்ப நீங்க யாரு தெரியுமா சார்..?

நல்லா தெரிஞ்சுக்கோங்க..!
அரசியல்ல..
நீங்க ஒரு டுபாக்கூர்.!

இன்னும் உங்க மேல நாங்க அன்பு வச்சிருக்கோம்! நீங்க ஒரு நல்ல நடிகர்..
அந்த வேலைய நல்லபடியா செய்யுங்க சார்!

அன்புடன்,
வீரசிங்கம்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response