தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு பிரபாகரன் தேவைப்பட்டார், இப்போது தேவையில்லையா? – சீமான் காட்டம்.

கருணாநிதியை விமர்சிக்கும் அளவுக்கு ஜெயலலிதாவை சீமான் விமர்சிப்பதில்லை என்று தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் பிரபல வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தேர்தல் நேரத்தில் தேவைப்பட்ட பிரபாகரன் இப்போது தேவையில்லாமல் போய்விட்டாரா? என்று காட்டமாகக் கேட்டிருக்கிறார் சீமான். இது தொடர்பாக அவர் சொன்ன பதில் ….

”வாரிசு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சிப் பின்புலமோ இல்லாமல், முதல் தலைமுறையாக சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னை, பொதுவெளியில் களமாடவைத்தது ஈழ அரசியல். ஈழப் படுகொலைகளில் இருந்து பிறந்தவர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசியலின் தேவையை உணர்ந்து, ‘நாம் தமிழர்’ கட்சியை உருவாக்கினோம். சில காலமாகவே முதல் மாநாட்டுக்கான வேலைகளைத் திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். மாநாட்டுக்கு ஏக அரசுக் கெடுபிடிகள். கடைசி நேரத்தில் தலைவர் பிரபாகரனின் படங்களை அப்புறப்படுத்தினார்கள். இதே பிரபாகரனின் படத்தின் கீழ் நின்று வாக்குகள் கேட்டபோது, அதை வரவேற்றது அ.தி.மு.க அரசு. அன்றைக்குத் தேவைப்பட்ட பிரபாகரன், இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படவில்லை. அவை அனைத்தையும் சமாளித்துச் சாகசம் நிகழ்த்தியிருக்கிறார்கள் எங்கள் பிள்ளைகள். லட்சம் இளைஞர்கள் திருச்சியில் திரள, பிரபாகரன் என்ற பெருநெருப்பே காரணம்.”

 

Leave a Response