மோடியின் தமிழக வருகையை உலகத்துக்கு தெரிவிக்கும் கோ பேக் மோடி டிரெண்டிங்

கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக கோவை கொடிசியா வளாகத்தில் பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கோவை,நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு மோடி ஆதரவு திரட்ட உள்ளார்.

இதற்காக இன்று விமானம் மூலம் கோவை வரும் மோடி, மாலை 6.30 மணிக்கு கூட்டத்தில் பங்கேற்கிறார். மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே மோடி வருகையை முன்னிட்டு கோவை, திருப்பூர், ஈரோடு ,நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு வழக்கம் போல் கோ பேக் மோடி, கோ பேக் சேடிஸ்ட் மோடி ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

இதனால் வட இந்தியாவிலுள்ளவர்கள், என்னது டிவிட்டரில் கோ பேக் மோடி டிரெண்டாகிறதே, மோடி தமிழகம் போகிறார் போலும் என்று தெரிவிக்கின்றனர்.

Leave a Response