பெங்களூரு அணியைப் பந்தாடியது டெல்லி

ஐபிஎல் 12 – பெங்களூரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 20 ஆவது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது.

பெங்களூர் அணியில் அதிகபட்சமாக வீரர் விராட் கோலி 41 (33) ரன்கள், மொயின் அலி 32 (18) ரன்கள் எடுத்தனர்.

டெல்லி அணியில் சிறப்பாகப் பந்து வீசிய ரபடா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் மோரிஸ் 2 விக்கெட், லமிச்சானே மற்றும் அக்‌ஷர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.5 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து (152 ரன்கள்) இலக்கை எட்டியது.

இதன்மூலம் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 67 (50) ரன்கள், பிரித்வி ஷா 28 (22) ரன்கள் எடுத்தனர்.

பெங்களூர் அணியில் நவ்தீப் சைனி 2 விக்கெட் மற்றும் மொயின் அலி, டிம் சவுதி, முகமது சிராஜ், பவன் நெகி, ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Leave a Response