2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 19,2019) வெளியிடப்பட்டது.
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி சிறிது நேரத்தில் வெளியான தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்…..
1.வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும்.
2.இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெற எம்ஜிஆர் பெயரில் திறன் மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்படும்.
3.அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை நாடுமுழுவதும் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும்.
4.காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்
5.வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
6.வீணாகும் தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயன்படுத்த புதிய திட்டம்.
7.நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
8.கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
9.மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.
10.விவசாயக் கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
11.தமிழகத்தில் 3 புதிய நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
12.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிடுமாறு குடியரசுத் தலைவரிடம் அதிமுக வலியுறுத்தும்.
13.தமிழ் மொழியை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
14.தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு.
15.புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
16.பொதுசிவில் சட்டத்தை செயல்படுத்தும் எந்த முயற்சிலும் ஈடுபடக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம்.
17.மதம் மாறினாலும் சாதிரீதியான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படு்ம்.
இவற்றில் நீட் தேர்வு, கலவி மாநிலப் பட்டியல், பேரறிவாளன் விடுதலை உள்ளிட்ட பல விசயங்கள் இதற்கு முன் வெளியிடப்பட்ட திமுக அறிக்கையிலும் இருக்கிறது.