தேர்தல் பணிகள் குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

நாம்தமிழர் கட்சியும் களத்தில் குதித்துள்ளது.
தேர்தல் தொடர்பாக சீமான் காணொலி மூலம் கூறியிருப்பதாவது….

உயிருக்கினிய நாம்தமிழர் அனைவருக்கும் அன்பு வணக்கம்,

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும்
மார்ச் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல்.

அடுத்த நாள் 23ஆம்தேதி காலையில் வேட்பாளர்கள் பேச்சாளர்கள் அனைவரையும் சந்தித்து கலந்துரையாடுவது.

அதனைத்தொடர்ந்து மாலையில்…
மயிலை மாங்கொல்லையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்.

25ஆம் தேதி பரப்புரை தொடங்குகிறது,

புதுச்சேரியில் தொடங்கி கடலூர் தொடர்ந்து ஏப்ரல் 16ஆம் தேதி மாலை 3மணிக்கு சென்னையில் முற்றுபெறுகிறது.

பயண பரப்புரைத் திட்டம் தலைமை நிலையத்திலிருந்து அறிவிக்கப்படும்.
என் அன்பு உறவுகள் அனைவரும் இதற்கேற்ப வேலைத்திட்டங்களை வகுத்து களப்பணி ஆற்றுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம். நாம்தமிழர்.

புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளை மலரும் நமது அரசு சொல்லும்.

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.

இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Leave a Response