நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ போட்டியிடுகிறாரா? – விடை தெரிந்தது

2019 நாடாளுமன்றத் தேர்தல் -தமிழகத்தில் திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில், மதிமுகவுக்கு ஒரு ம்க்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த ஒரு மக்களவைத் தொகுதியில் வைகோ போட்டியிடுவாரா? என்கிற கேள்வி பலருக்கு இருக்கிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக திமுகவைச் சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்….

வைகோ அவர்கள் 1978 இல் முதன்முதலாக மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டார். தற்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டில் வைகோ அவர்களுக்கு கூட்டணியின் மிக முக்கியத் தலைவர் என்ற நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக வரும் ஜூன் மாதம் நடக்கும் தேர்தலில் அறிவிக்கப்பட உள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. கூட்டணியின் தலைவரான கழகத் தலைவரோடு ஏற்பட்ட உடன்பாட்டில் இந்த முடிவு எட்டப்பட்டது.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

இதிலிருந்து வைகோ மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை, மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

Leave a Response