திமுக கூட்டணியில் இணைந்தார் பாரிவேந்தர் – காரணம் இதுதான்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் நேற்றுவரை அதிமுக கூட்டணியில் இருந்ததாகச் சொல்லப்பட்ட பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து, திமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.

இவருக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். அந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலேயே அவர் போட்டியிடவிருக்கிறாராம்.

அதிமுக கூட்டணியிலிருந்து இவர் வெளியேற முக்கியக் காரணம் பாமகதான் என்கிறார்கள். பாமக இருக்கும் இடத்தில் நான் இருக்கமாட்டேன் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு என்கிறார்கள்.

Leave a Response