அடுத்தடுத்து விபத்துகள் – ஜெயலலிதா ஆவி பழிவாங்குகிறதா?

வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளியில் அரசு விழாவிற்கு வந்த கள்ளக்குறிச்சி எம்.பி., காமராஜ் கார் கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது. கள்ளக்குறிச்சி எம்.பி., காமராஜ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்பி காமராஜ் இன்று சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னாம்பள்ளி என்ற இடத்தில் கார் செல்லும்போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்தது.

காரின் டயர் வெடித்ததால், ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த எம்.பி. காமராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் நேற்று நடந்த கார் விபத்தில் பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து நடந்த இரண்டு விபத்துகளால் தமிழகம் அதிர்ந்து போயிருக்கும் நிலையில், அதிமுக பாஜக பாமக கூட்டணி பிடிக்காத்தால் கோபம் கொண்ட அம்மாவின் ஆன்மா பழிவாங்கத் தொடங்கியுள்ளது என்று சமூகவலைதளங்களில் கொளுத்திப் போடத் தொடங்கியுள்ளனர்.

Leave a Response