விராட்கோலிக்கு ஓய்வு – ரோகித் சர்மா அணித்தலைவர்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய மட்டைப்பந்தாட்ட அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது.

இன்று நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதுவரை அணித்தலைவராக் ரோகித் சர்மா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response