நியூசிலாந்து – இந்தியா மட்டைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடர் நடக்கவிருக்கிறது.
இந்திய ரசிகர்கள் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கு வசதியாக அனைத்து ஒருநாள் போட்டிகளும் பகல்-இரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது.
முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் சனவரி 23 ஆம் தேதி
2 ஆவது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுவில் சனவரி 26 ஆம் தேதி
3 ஆவது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுவில் சனவரி 28 ஆம் தேதி.
4-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் ஜனவரி 31 ஆம் தேதி
5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டனில் பிப்ரவரி 3 ஆம் தேதி.
அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
அதன்பின் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டனில் பிப்ரவரி 6 ஆம் தேதி நடக்கிறது.
இந்த ஆட்டம் மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.
2 ஆவது போட்டி ஆக்லாந்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்கிறது.
இந்தப் போட்டி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.
3 ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் பிப்ரவரி 10 ஆம் தேதி நடக்கிறது. இந்த போட்டி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.