ரஜினி திடீர் உத்தரவு – மன்றத்தில் குழப்பம்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தொடர்ந்து ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி ஒரு அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றம் அரசியல் கட்சி போலவே செயல்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் புகார் கூறப்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நிர்வாகிகளை முறைப்படுத்த அந்தந்த மாவட்டங்கள், அணிகளுக்கு தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்கள் இயங்குகின்றன.

இந்த வாட்ஸ்அப் குழுக்களுக்கு இன்று ரஜினிகாந்த் அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை குரூப்பில் சேர்க்க கூடாது.

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ்அப் குரூப்களில் பிற மாவட்ட நபர்களை சேர்க்கக் கூடாது. வாட்ஸ்அப் குரூப்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினராக சேர்க்க வேண்டும்

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திடீரென எதற்காக இப்படி ஒரு அறிக்கை வருகிறது. அப்படியானால் இதுவரை ரஜினி பிறப்பித்த உத்தரவுகள் கடைபிடிக்கப்படவில்லையா? என்கிற சந்தேகம் மற்றவர்களுக்கு வந்துள்ளது.

Leave a Response