மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது எதனால்?

மிசோரம், தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. இவற்றில் மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 28,2018 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் அனைத்து தொகுதிகளின் ஓட்டு என்ணிக்கையும் முடிவடைந்து விட்டது.

இதில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளில் வெற்றிபெற்று உள்ளனர்.

இதனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது. மிசோரம் முதல்வர் லால் தன்வாலா காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வரும் எனக் கூறியிருந்தார். அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் தோல்வியுற்றார்.

மிசோரம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, சில முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, எம்.என்.எப் கட்சி மற்றும் பாஜகவில் இணைந்தனர். அதனால் தான் மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ் கட்சி என கூறப்படுகிறது.

மாநிலத்தில் கட்சிகள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-

மிசோ தேசிய முன்னணி – 37.6 சதவீதம்
காங்கிரஸ் – 30.2 சதவீதம்
சுயேட்சைகள் – 22.9 சதவீதம்
பாரதீயஜனதா – 8 சதவீதம்
நோட்டா – 0.5 சதவீதம்
மற்றவை – 0.80 சதவீதம்

Leave a Response