தந்தி டிவியிலிருந்து விலகியது ஏன்? – ரங்கராஜ் பாண்டே விளக்கம்

தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டதாகச் சொல்லப்பட்டது.

ஏற்கெனவே அதுபோன்றதொரு செய்தி வந்து அது பொய்யானதால் இப்போதும் முழுமையாக நம்பமுடியாமல் இருந்தது.

தந்தி தொலைக்காட்சியிலிருந்து விலகியது உண்மைதான் என்று பாண்டேவே அறிவித்திருக்கிறார்.

ஒரே மாதிரியான வேலையை தொடர்ந்து செய்யும்போது ஏற்பட்ட அயற்சி காரணமாகவே விலகியதாகத் தெரிவித்திருக்கிறார்.

தந்தி நிர்வாகம் அவருடைய விலகலை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாம்.

தந்தியிலிருந்து விலகினாலும் புதிய முயற்சியுடன் விரைவில் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனால் அவர் விலகினாரா? இல்லையா? என்கிற சர்ச்சைக்கு முடிவு வந்திருக்கிறது.

Leave a Response