கொஞ்சம் கூடக் கூச்சமில்லையா? – கொந்தளிக்கும் கமல்

தமிழகத்தில் நவம்பர் 16,2018 ஆம் தேதி காவிரி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.

கஜா புயலின் தாக்குதலால் பல இலட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமாயின. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், நிவாரணப் பொருட்கள் ஆகியவை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி தமிழக அரசு சார்பில் நிதியுதவியும் கேட்கப்பட்டு உள்ளது.

அரசு தவிர அரசியல்கட்சிகளும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றன.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயணம் செய்து மக்களுக்கு ஆதரவளித்தார்.

பாதிப்புகளைப் பற்றி முழுமையாக அறிந்த காரணத்தால்
அவர் இன்று ட்விட்டரில் , கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும் என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response