ஜெ. விடுதலை,ஊழல் அரசியல்வாதிகளுக்கு தைரியம் கொடுக்கும் தீர்ப்பு– ஜி.கே.நாகராஜ் காட்டம்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான தீர்ப்பு பொதுமக்களுக்கு நீதி மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையில் பெரும்சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் G.K.நாகராஜ் அறிக்கை.

18 ஆண்டு காலம் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்குபேரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து தண்டனையையும்,அபராதமும் விதித்தார்.

நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவின் தீர்ப்பைப் படித்த சட்டநிபுணர்களும்,அரசியல் ஆய்வாளர்களும்,குன்ஹாவின் தீர்ப்பு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, முறையாக பரிசீலிக்கப்பட்ட சரியான தீர்ப்பு என்றும்,இதிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிலதா உள்ளிட்டோர் தப்பிக்க இயலாது என்றும் கூறப்பட்ட நிலையில், கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர்கள்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை என்ற தீர்ப்பு நடுநிலையான, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது,

நீதிபதி குமாரசாமி அவர்களின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலைக்கான தீர்ப்பின் முழுவிவரம் எதையொட்டி அமைந்திருந்தாலும், இன்று வழங்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு முழுசாதகமாக அதாவது,தண்டனையை ஒட்டுமொத்தமாக ரத்துசெய்து. தேர்தலில் நிற்கவோ,முதல்வராகவோ தடையில்லை என்ற வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பு,ஊழல் செய்தாலும்சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி அதிலிருந்து மீண்டுவிடலாம் என்ற தைரியத்தை ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

நீதிபதி குமாரசாமி அவர்களின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள பொதுமக்களுக்கு நீதி மற்றும் நீதிமன்றத்தின்மீதான நம்பிக்கையில் பெரும்சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response