முன்னாள் அமைச்சர் சிறந்த பேச்சாளர் பரிதி இளம் வழுதி காலமானார்

தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்த பரிதி இளம்வழுதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 1989 முதல் 2011 வரை 28 ஆண்டுகள் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். பரிதி இளம்வழுதி எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

திமுக ஆட்சியில் 1996 – 2001-ல் துணை சபாநாயகராகவும், 2006 – 2011 வரை விளம்பரத்துறை அமைச்சராகவும் பரிதி இளம்வழுதி பதவி வகித்தார்.

2013 இல் திமுகவில் இருந்து விலகிய பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். தற்போது அமமுகவில் இருந்தார்.

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பரிதி இளம்வழுதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Response