பரியேறும் பெருமாள் படத்துக்கு கமல் பாராட்டு – படக்குழு மகிழ்ச்சி

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பரியேறும் பெருமாள்” படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும்,இயக்குநர் மாரி செல்வராஜையும் நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார் நடிகர் கமல்.

என் நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி. இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள் என்று வாழ்த்தி அனுப்பினாராம்.

இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Leave a Response