விளையாட்டரங்குக்கு 50 இலட்சம் எம்.பி நிதி – பகிர்ந்தளித்த சத்யபாமாவுக்குப் பாராட்டு

திருப்பூரில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், 2 ஆயிரத்து 827.40 சதுரமீட்டர் பரப்பில் அமைந்துள்ள இந்த விளையாட்டு அரங்கில், வீரர்கள் தங்கும் அறை, உடை மாற்றும் அறை, கூட்ட அரங்கம், உடற்பயிற்சி அறை, வி.ஐ.பிகள் அறை, உயர்மட்ட பார்வையாளர்கள் இருக்கை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
கூடை பந்து, கைப்பந்து, கையுந்து பந்து, ஜிம்னாஸ்டிக், இறகுபந்து, டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு திடல் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வரங்கில், மரத்தால் ஆன தளம் அமைக்க ரூ.50 லட்சம் தேவை எனும்போது அதைத் தனது எம்.பி நிதியில் இருந்து பகிர்ந்தளித்துள்ளார் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா.

விளையாட்டுத்துறைக்கு உதவ முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி எனக் கூறியுள்ள சத்யபாமா, விளையாட்டு வீரர்கள் இதை நன்கு பயன்படுத்தி சாதனை புரிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உரியவகையில் உதவி செய்தமைக்காக, விளையாட்டுத்துறையினர் சத்யபாமாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Response