கர்நாடகத்தில் மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்டு 31-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் 67.51 சதவீத ஓட்டுகள் பதிவாயின. 30 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கலபுரகி, சாம்ராஜ்நகர் ஆகிய 2 மாவட்டங்களில் 2 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
மொத்தம் 2,633 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 9,121 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இந்தத்தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தனித்து போட்டியிட்டதால், எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதில், பாரதீய ஜனதாவை விட காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் 966 இடங்களையும், பாஜக 910 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 373 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
கர்நாடக நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜகவின் பின்னடவை ஒப்புக்கொண்டுள்ளார் பாஜக மாநில கட்சி தலைவர் எடியூரப்பா.
மும்முனைப் போட்டி ஏற்பட்டதால் எளிதில் முதலிடம் பிடிக்கலாம் என்ற பாஜகவின் எண்ணம் தோல்வி அடைந்ததால் டெல்லி பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.