கேரள வெள்ளம் பற்றி கவிதை – கவிஞருக்குக் கொலைமிரட்டல்

கேரள மழை, வெள்ளப் பாதிப்புக்குச் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுதான் காரணமென ஆடிட்டர் குருமூர்த்தி எழுதினார்.

இதற்குப் பலரும் எதிர்வினை ஆற்றினர். அந்த வகையில் எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

அவர் மீது இந்துக் கடவுளை அவமதித்துவிட்டார் என்றுக் கூறி காவல்நிலையங்களில் புகார் கொடுக்கும் செயலில் இறங்கியுள்ளனர் இந்து அமைப்பினர்.

இதைத் தொடர்ந்து மனுஷ்யபுத்திரனுக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் வருகின்றன.

மனித உரிமை செயற்பாட்டாளர் கோ.சுகுமாறன் இது தொடர்பாக,

இதன் பின்னணியில் எச்.ராஜா உள்ளார். எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டிப்போம் என்று கூறியுள்ளார்.

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியிருப்பதாவது….

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து தொலைபேசி மூலம் மிரட்டப்படுகிறார். ஆபாச வசைகளும் தொடர்கின்றன. ஹெச்.ராஜா இதன் பின்புலத்தில் உள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனே கொலை மிரட்டல் வழக்கில் ஹெச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response