ஈரோடு திருப்பூர் விவசாயிகள் புதுமுயற்சி – மத்திய அரசிடம் ஆதரவு கேட்ட சத்யபாமா

தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் மாதுளை சாகுபடிக்கு ஏதுவாக மாதுளை பற்றி தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செப்டம்பர் மாதம் 6 முதல் 8 ஆம் தேதி வரை கருத்தரங்கம் நடக்கவுள்ளது.

இதற்கு நிதி ஒதுக்கீட்டு அனுமதி வழங்கக் கோரி, திருப்பூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கிடம் கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக சத்யபாமா கொடுத்த மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கருத்தரங்கத்துக்கு நிதி ஒதுக்கீட்டு அனுமதி குறித்து பரிசீலனை செய்து பதிலை தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

சத்யபாமா கொடுத்த மனுவில்,

எனது திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், அந்தியூர், பவானி, தாராபுரம் ஆகிய ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாதுளை பயிரிடுதலுக்கான முயற்சியில் தமிழ்நாடு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் என்பதை தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்.

மாதுளை பயிரிடுதல் பற்றிய நுணுக்கங்களை இந்தப் பகுதி விவசாயிகள் அதிகம் அறியாதிருப்பதால் அவர்களுக்கு அது பற்றிய பயிற்சியை அளிப்பது அவசியம்.

இதற்காக தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செப்டம்பர் மாதம் 6 முதல் 8 ஆம்  தேதி வரை மாதுளை பற்றி மூன்று நாள் கருத்தரங்கத்துக்கு சோலாப்பூர் NRC, கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், சென்னை NHB, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை ஆகியவற்றுடன் இணைந்து கோபிச்செட்டிப்பாளையம் மாதுளை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
 
மாதுளை உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் விவசாயிகள் மாதுளைகளை பயிரிடுதலில் ஈடுபட உதவும் என்பதால் உங்களை இந்தக் கருத்தரங்கத்தை நடத்த இந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்குமாறு நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

மிகப் பயன்பாடு உடைய தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கு இந்த நிகழ்ச்சி வழிவகுக்கும் என்பதால் எங்கள் பகுதி விவசாயிகளுடன் தங்கள் இதற்கான நிதி உதவிக்கான அனுமதியையும் வழங்கக்கோருகிறேன்.
 
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Response