சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.
அவரது உடல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பேழை அருகே, தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தி இடம்பெற்ற இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டு உள்ளது.
ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அதிகாலையிலேயே வந்து ரஜினிகாந்த் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், அவர் மனைவி லதா , மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின், மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார்.