கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி பின்புறம் அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் அமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், சட்டச்சிக்கல்கள் காரணமாக மெரினாவில் உடல் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது எனவும், அதற்கு மாறாக காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மறுப்பு தெரிவித்தற்கு எதிராக, நீதிமன்றத்தில் திமுக முறையிட்டது.
இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 11.30 மணி அளவில் பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
நள்ளிரவுவரை தொடர்ந்த விசாரணைக்குப் பிறகு காலை எட்டு மணிக்கு விசாரணை தொடரும் என்று சொல்லிக் கலைந்தனர்.
இன்று காலை எட்டுமணிக்கு மேல் விசாரணை தொடங்கியதும், மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கடுமையான வாக்குவாதங்களுக்குப் பின் பத்தரை மணியளவில் தீர்ப்பு சொல்லப்பட்டது.
அதில்…
மெரினாவில் கலைஞர் உடல் அடக்கம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது.
இதையடுத்து மக்களஒ நோக்கி கண்ணீருடன் நன்றி சொன்னார் ஸ்டாலின்.