கலைஞர் உடல்நிலை – மீண்டும் பரபரப்பு

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.

நல்ல முன்னேற்றம் காணப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் இன்று காலை திடீர் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது கண்காணிப்பில் உள்ளார்.

மு.க.ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தியம்மாள், மு.க.அழகிரி, தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பலரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

Leave a Response