
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும்போது….
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா? என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகள் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை. ரஜினி பா.ஜனதா பக்கம் சென்றால் தலித், சிறுபான்மையினர் உள்ளிட்ட 36 சதவீத வாக்குகளை இழப்பார் என கூறினார்.
இதைத் தொடர்ந்து,
விஸ்வரூபம் -2 படத்தின் விளம்பர வேலைகளுக்காக சென்னையிலிருந்து டெல்லி புறப்படுவதற்கு முன், விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனிடம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கூட்டணி வைக்க சிக்னல் அளித்துள்ளதாகத் திருநாவுக்கரசர் கூறியிருப்பது உண்மையா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,
நான் கொடுப்பதுதான் சிக்னல். நான் கூறியதாக திருநாவுக்கரசர் சொல்வது வெறும் செய்தி மட்டுமே. அது எப்படி நான் கூறியதாக ஆகும்? எனக் கேட்டுவிட்டுப் புறப்பட்டார்.


