பா.இரஞ்சித் தொடங்கும் அம்பேத்கர் ஆர்மி – அரசியல் பரபரப்பு

அண்மையில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தியை இயக்குநர் பா.இரஞ்சித் சந்தித்திருப்பது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் எதற்காக ராகுல்காந்தியைச் சந்தித்தார்? என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

அந்தச் சந்திப்புக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அவற்றில் ஒன்று,

குஜராத்தின் ஜிக்னேஷ் மேவானி போல தமிழகத்தில் ஒரு அரசியல் அமைப்பை பா.இரஞ்சித் தொடங்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே அவர் திரைப்படம் தாண்டி, நீலம் பண்பாட்டு அமைப்பு உட்பட சில விசயங்களைச் செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக ஓர் அரசியல் அமைப்பைத் தொடங்கவிருப்பதாகவும், அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதற்கான ஆதரவை காங்கிரஸ் கட்சியிடம் கேட்பதற்காகவே இந்த முதல்கட்டச் சந்தீப்பு நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அவர் தொடங்கவிருக்கும் அமைப்புக்கு தற்போது பரிசீலனையில் இருக்கும் பெயர் அம்பேத்கர் ஆர்மி.

Leave a Response