ரஜினி ரகசிய உத்தரவா? ரசிகர்கள் குழப்பம்

லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியவர் ராஜுமகாலிங்கம். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் ராஜூ மகாலிங்கத்துக்கும் ரஜினிக்கும் இடையே நல்ல நட்பு வளர்ந்தது.

நாளடைவில் ரஜினியின் நண்பராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் மாறிய அவர் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு முன்னதாக லைகா நிறுவனத்திலிருந்து விலகினார். பிறகு ரஜினி மக்கள் மன்ற மாநிலச் செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டார்.

ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ராஜூ மகாலிங்கத்தை மன்றச் செயலாளர் பொறுப்பில் இருந்து ரஜினிகாந்த் நீக்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அச்செய்தி தவறானது என்று ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”சமூக வலைதளங்களில் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜூ மகாலிங்கத்தை நீக்கிவிட்டதாக செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதால் யாரும் நம்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனாலும் ராஜுமகாலிங்கம் நீக்கப்பட்டது உண்மை என்று சொல்லப்படுகிறது,கட்சி தொடங்குமுன்பே தலைமை நிர்வாகியை மாற்றினால் பெயர் கெட்டுவிடும் என்பதால் அதை வெளிப்படையாகச் செய்யவில்லை.

அதேசமயம், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும், ராஜு மகாலிங்கத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதை மன்றத்தின் முக்கிய நபர்களே சொல்லி வருவதால், அதிகாரப்பூர்வ அறிக்கையை நம்புவதா? இதை நம்புவதா? என்று தெரியாமல பெரும்பலான மன்ற நிர்வாகிகள் குழ்ம்புகிறார்கள்.

Leave a Response