இப்படியெல்லாம் செய்துதான் பிக்பாஸை காப்பாற்ற வேண்டுமா?

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் இரண்டாம் பாகம், முதல்பாகம் போல் வெற்றியடையவில்லை. எனவே அதை வெற்றி நிகழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்பதற்காக தரத்தைக் குறைத்துவிட்டார்கள்.

ஜூலை 11 அன்று வெளியாகியிருக்கும் பிக் பாஸ் விளம்பரத்தில் மகத்தும் பாலாஜியும் கோபத்துடம் சத்தமாக சண்டையிட்டுக் கொள்வது போல காட்டப்பட்டது.

ஏற்கெனவே பொன்னம்பலம் இரட்டை அர்த்த தொனியில் பேசினார்.

அதன்பின்,

டாஸ்க் தொடர்பான அறிவிப்பை ஜனனி மூலம் வெளியிட்டார் பிக் பாஸ். இந்த டாஸ்க்கில் 3 பேர் திருடர்களாகவும் 3 பேர் போலீஸாகவும் மாற வேண்டும். அதன் படி யாஷிகா, ஐஸ்வர்யா, டேனியல் திருடர்களாகவும், மகத், மும்தாஜ், சென்றாயன் போலீஸாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜனனி அந்த அறிவிப்பை படித்துக் கொண்டிருக்கும்போதே யாஷிகா “திருடிய பொருட்கள் எங்களுக்குதான் சொந்தம்” என்று விளையாட்டாக சொன்னார். உடனே மகத் யாஷிகாவை நோக்கி ‘செருப்பு பிஞ்சிடும்’’ என்று கூறவும் யாஷிகா அமைதியாகி விட்டார். (இதை விளையாட்டாகச் சொன்னதாகச் சொல்கிறார் மக்த்.)

பாலாஜி பேசியதை மட்டும் குறும்படம் போட்டு காட்டினார்கள் மகத் பேசினால் விட்டு விடுவார்களா என்பது நித்யாவின் வாதம். திருடன், போலீஸ் டாஸ்க் தொடங்கியதும் இப்படி நித்யா சொன்னதை யாஷிகா மூலம் தெரிந்து கொண்ட மகத் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டார்.

”அது என்னோட பிரச்சனை.. அத பத்தி அவங்க பேச தேவையில்லை” என்று கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு டேனியல் ”உன்னை பத்தி எனக்கு தெரியும்.. இப்ப இப்படி கத்துவ.. அப்புறம் அடங்கிடுவ.. கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணு” என்று அறிவுரை கூறினார்.

‘‘உன் கோபத்தால் தான் இவ்வளவு பிரச்சனையும். என் பெயர் டேமேஜ் ஆகிறது. அப்ப கூட நீ எனக்கு சப்போர்ட் பண்ணாம அந்த பக்கம் தான் சப்போர்ட் பண்ண. எனக்கும் பேசத் தெரியும்” என்று கோபமாக கூறினார்.

அப்போது கோபமடைந்த மகத் கையில் வைத்திருந்த லத்தியால் ஓங்கி அங்கிருந்த மேஜையில் அடித்து விட்டு அங்கிருந்த கிளம்பினார். மீண்டும் யாஷிகா மகத்தை அழைத்து அறிவுரை கூறவும் அமைதியாக கேட்டுக் கொண்டார் மஹத்.

இதற்கடுத்து வெளியான விளம்பரத்தில்,

மகத் பாலாஜியிடம் “என்னை பார்த்து பிச்சையெடுத்து சாப்பிடு என்று சொல்ல நீ யாரு?”என்று கோபமாக கத்துகிறார். பதிலுக்கு பாலாஜியும் கோபமாக எதோ சொல்ல மஹத் “போடா காமெடி” என்று திட்டுகிறார்.

இருவரும் அடிக்கச் செல்வது போல் ஒருவரை நோக்கி ஒருவர் பாய்ந்து செல்கிறனர். பிக் பாஸ் வீட்டின் விதிகளின் படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

இப்படியெல்லாம் செய்தால்தான் நிகழ்ச்சி வெற்றி பெறும் என்று நம்பிச் செய்கிறார்கள்.

Leave a Response