கால்பந்து – பிரான்ஸை காப்பாற்றிய சாமுவேல்

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

இந்திய நேரப்படி ஜூலை 10 இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.

ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 – 0 என சமனிலை வகித்தன.

இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Leave a Response