கன்னடத்தில் புகழ் பெற்ற நடிகரும் அரசியல்வாதியுமான அம்பரீஷ் தன் மகன் அபிஷேக்கை கதாநாயகனாக்கி ஒரு படம் எடுக்கிறார்.
சஞ்சு வெட்ஸ் கீதா, மைனா போன்ற. வெற்றிப்படங்களை இயக்கிய நாக்சேகர் அந்தப்படத்தை இயக்குகிறார்.
கன்னடத்தில் உருவாகும் இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவர், அள்ளித்தந்த வானம், வெள்ளித்திரை ஆகிய படங்களின் இயக்குநரும் மொழி, 36 வயதினிலே உட்பட பல வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிய விஜி.
திரைக்கதைக்கு மொழியில்லை்என்பது மட்டுமின்றி விஜியின் எழுத்து வலிமை காரணமாகவே கன்னடப் படத்தின் திரைக்கதை அமைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதுவும் கன்னடத்தின் மூத்த முன்னணி நடிகரின் படத்திற்காக தேடிவந்து கொடுத்த வாய்ப்பு என்பது தமிழர்களுக்குப் பெருமை தரும் செய்தி.