கால்பந்து திருவிழா- போர்ச்சுகல் அணிக்கு முதல்வெற்றி

உலக்க்கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ”பி” பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் -மொராக்கோ அணிகள் மோதின.

போர்ச்சுக்கல் அணி, ஸ்பெயின் அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 3-3 என்ற கணக்கில் டிரா செய்தது. ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல்கள் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். மறுமுனையில், ஈரானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் மொராக்கோ அணி தோல்வி அடைந்த இருந்தது.

இந்த நிலையில், போர்ச்சுக்கல்- மொராக்கோ ஆகிய இரு அணிகளும் இன்று மோதின.

ஆட்டத்தின் துவக்கத்திலேயே நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்து அசத்தினார். கடைசி வரை இரு அணிகளும் மேற்கொண்டு ஒரு கோலும் அடிக்காததால், ஆட்டத்தின் முடிவில் போர்ச்சுக்கல் அணி 1-0 என்ற கணக்கில், தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Leave a Response