காலா தோல்விக்கு இதுதான் காரணம் – இப்படியும் ஒரு பார்வை

பத்து ரூபாய்க்கு பொருள் வாங்கி, அதை இருபது, முப்பது ரூபாய்க்கு வித்தா அதுக்கு பேரு வியாபாரம்; அது தான் இலாபம்.

நூறு ரூபாய்க்கு பொருளை வாங்கி, அதை நாப்பது ரூபாய்க்கு வித்துட்டு, அது தான் வித்ததுலயே அதிகமாக வித்து இருக்குன்னு கூவறதை, இனிமேல் ‘காலா’ன்னு பெயரிட்டு அழைக்கலாம்.

ஆழ்ந்த நன்றிகள் லைகாவுக்கும், சார்ந்தோர்க்கும்! ரஜினியையும், ரஞ்சித்தையும் தோற்கடித்து, மண்ணை கவ்வ வைத்த மக்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!

தமிழ் சினிமாவின் எந்த பெரிய ஹீரோவும் இனி ரஞ்சித்தோடு படம் பண்ண மாட்டோம் என்று அடுத்து முடிவெடுத்தால், அது தமிழ்நாட்டுக்கும், தமிழ் சினிமாவிற்கும் மிக நல்லது.

ஆரவாரங்கள் ஒய்வதற்காக தான் காத்திருந்தேன். என்.ஜி.ஒ கேப்பிடலிஸ்டுகள், “நீலப்” படங்கள் (Don’t confuse with the original blue films, atleast there are professionals in that genre), ஷோல்டர் தூக்கல்கள், அம்பேத்கர்டா, பெரியார்டா, தமிழன்டா, ஒடுக்கப்பட்டவண்டா போன்ற அபாண்டங்களை நிராகரித்து, தமிழ்நாடு தெளிவாக இருக்கிறது என்பது தான் ஆக சிறப்பு.

வழக்கமாய், ப்ளாப்பாகும் ரஜினிப் படங்களுக்கு ரஜினி ரசிகர்கள் தான் முட்டுக் கொடுப்பார்கள். இது ர + ர என்பதால் பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், அறிவுஜீவிகள், வட்ட,சதுர,செவ்வக,முக்கோண இயக்கங்கள் எல்லாம் வேறு வழியில்லாமல் தூக்கி நிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கொடி பறக்குது, ஊர்க் காவலன் ரேஞ்சிற்கு ப்ளாப்பாகும் என்று எதிர்பார்த்தால், இது லிங்கா, கோச்சடையானுக்கு டஃப் பைட் கொடுக்கிறது. வயசான காலத்தில் ரிட்டையர்ட் ஆனோமா, இமயமலையில் அடுத்த பாபாஜி ஆனோமா என்றில்லாமல்…….. ஆசை யாரை தான் விட்டது. தாடி வைத்தவர்கள் எல்லாம் பெரியார் ஆகி விட முடியுமா என்ன?

மைண்ட்லெஸ் எண்டர்டெய்னர்களில் ஒரு சிக்கலும் இல்லை. கருத்தியல் சொல்கிறேன், சமூக அக்கறையோடு இருக்கிறேன் என்று எழும் ஆஃப் பாயில்களிடத்தில் தான் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமுத்திரகனி ஒரு ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’ அரைவேக்காடென்றால், ஏ.ஆர். முருகதாஸ் ஒரு ‘இட்லி கம்யூனிஸ்டு’ என்றால், ரஞ்சித் ஒரு ‘பீம் இல்லாமல் பிரபஞ்சமில்லை’ என்கிற குறுஞ்சிதைவுக்கு ஆளான ஒரு urban dalit. இவை எல்லாமே அதனதன் அளவிலும், அரைவேக்காட்டுத் தனத்திலும் ஆபத்தானவை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

சின்ன வயதில் பள்ளிச்சீருடை என்பது வெள்ளை சட்டை, காக்கி டவுசர் என்பதால், சட்டை வெண்மையாக இருக்க, வீட்டில் கொஞ்சமாய் நீலம் சேர்ப்பார்கள். அதுவே நீலம் அதிகமாய் போய் விட்டால் சட்டை முழுக்க பரவி படு கேவலமாக பல்லிளிக்கும். காலாவிலும் அது தான் நடந்திருக்கிறது.

மக்கள் தீர்ப்பே full and final. மேற்சொன்ன ஆட்கள் ஆடுகிற சர்க்கஸை தள்ளி நின்று ஜாலியாக வேடிக்கைப் பார்ப்போம். சொன்னதைப் போலவே, வேங்கயன் மவன் ஒத்தையிலே ஒத்தையாக மட்டுமே நின்று வீணாய் போனார்.

– நரேன்

Leave a Response