7 தமிழர்கள் விடுதலை – தமிழக அரசுக்கு பழ.நெடுமாறன் சொல்லும் இரு ஆலோசனைகள்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

ராஜுவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட. ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய தமிழக அரசின் வேண்டுகோளை உள்துறை அமைச்சர் ஏற்க மறுத்து அனுப்பிய பரிந்துரையை குடியரசு தலைவர் அவர்கள் ஏற்றுக் கொண்டு ஏழு பேரையும் விடுதலை செய்ய மறுத்துள்ள செய்தி ஒட்டுமொத்த தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசும் குடியரசுத் தலைவரும் மதிக்க மறுத்திருப்பது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானதாகும். அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய வேண்டும்.
இடைக்காலத்தில் ஏழு பேருக்கும் பரோல் விடுதலை அளிக்க முன்வர வேண்டுமென வற்புறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response