இயக்குநர் அமீர் பேச்சுக்குப் பயந்த பாஜக

நேற்று கோவையில் நடந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்வில்…

இயக்குனர் அமீர் அவர்கள் தன்னுடைய கருத்தை சொல்ல வந்தபோது பாஜகவினர் கூச்சலிட்டு அராஜகம் செய்தனர்.

அவர் சொல்ல வந்த கருத்து இதுதான்…

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே கோவையில் நடந்த சசிக்குமார் கொலைக்கு பின் ஏற்பட்ட வன்முறையில்

காவல்துறையினர் வாகனம் தீ வைக்கப்படவில்லையா?

பொது சொத்துக்கள்
சேதப்படுத்தப்படவில்லையா?

அன்று கலவரம் செய்த இவர்கள் தான் இன்று போராடிய மக்களைப் பார்த்து சமூகவிரோதிகள் என்று கூறுகிறார்கள்

என்று நடந்த உண்மையை பேச தொடங்கும்போதே அராஜகம் செய்த காவிகள்
தேசதுரோகி அமீரே பேசாதே பேசாதே என்று கூச்சலிட்டனர்.

(அந்த கலவரத்தை பேசினால் காவிகளின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பது தெரியும் அதனாலயே அதை பேசவிடாமல் கூச்சலிட்டனர்).

கூச்சலிட்டவர்களை நிகழ்ச்சி நெறியாளர் உட்பட மேடையில் இருந்த அனைத்து தலைவர்களும் கண்டித்ததைத் தொடர்ந்து மீண்டும் நிகழ்வு தொங்கியது.

நிகழ்வு தடை படும்போது அமீர் அவர்கள்தான் பேசினார் தற்போது அவரை விடுத்து சே.கு.தமிழரசன் பேசத்தொடங்கினார் இதை அரங்கத்தில் இருந்த நாம்தமிழர் கட்சியினர், தனியரசு அவர்களின் தொண்டர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அமீரை பேச விடுங்கள் அமீரை பேசவிடுங்கள் என முழக்கமிட்டனர்.

குறிப்பாக
அரங்கத்தில் இருந்த கோவையைச்
சேர்ந்த பொதுமக்களில் சிலர் கருத்துக்கு கருத்து சொல்லுங்கள் ஏன் அமீர் பேசக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்று கேட்டனர்

அதனைத்தொடர்ந்து மீண்டும் அமீர் அவர்கள் 2நிமிடங்கள் பேசினார் அதன் பிறகு சே.கு.தமிழரசன் பேசினார் அவர் பேசிமுடித்தவுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

கோவை மக்களை பொறுத்தவரை யார் மக்களுக்கானவர்கள்
யார் கலவரக்கார சமூக விரோதிகள் என தெளிவாக புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது.

Leave a Response