கமல் ரஜினியை பிரகாஷ்ராஜ் திட்டக் காரணம் இதுதான்

தமிழ் நாளேடொன்றுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினி சார்கிட்ட கேட்கிறேன்… மாநிலத்தில் ‘சிஸ்டம் சரியில்லை’னு கொதிச்சிப்போய் அரசியலுக்கு வந்திருக்கிற நீங்க, தமிழ்நாட்டுல பினாமி அரசாங்கம் நடத்துற பாஜக-வை ஏன் ஒரு வார்த்தைகூட கண்டிக்கலை? மாநிலத்துல சிஸ்டம் கெட்டுப்போயிருச்சினா, மத்தியில் சரியா இருக்கா?

என்று கேட்டிருக்கிறார். அடுத்து,

வணக்கம், ‘உலக நாயகன்’ கமல் சார்.. இது உங்களுக்கு… பலவீனமான மாநில அரசை சாட்டையை எடுத்து விளாசுறீங்க. ஆனா, மத்திய அரசு பத்தி மட்டும் ரொம்ப மென்மையா விமர்சனம் செய்றீங்க… ஏங்க?

என்று கேட்டிருக்கிறார்.

அரசியல் ரீதியாக அவருடைய கேள்விகள் சரிதான் என்றாலும், அவர் இவர்களைக் கேட்கக் காரணம், கமல், ரஜினி ஆகிய இருவருமே தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஒப்புக்கொள்ளவில்லை என்பதுதான் என்று திரைத்துறை வட்டாரங்கள் சொல்கின்றன.

Leave a Response