காலம் போன கடைசியில் கட்சியா? – ரஜினியைச் சாடிய எடப்பாடி

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது…

தமிழகத்தில், குடிமராமத்து திட்டம் உருவாக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் செலவில், 1,019 குளங்கள் பராமரிக்கப்பட்டன. 1,000 கோடி ஒதுக்கீடு திட்டத்தில் முதல் கட்டமாக, 350 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன.

மார்க்கெட் விலையை விட, கூடுதலான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து உளுந்து கொள்முதல் செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து, 3,000 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 250 டன் உளுந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில், உணவு தானிய உற்பத்தியில்தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இதற்காக, ‘கிரிஷ் சர்மா’ விருதும் பெற்று உள்ளது.

தமிழகத்தில், மருத்துவத்துறையிலும் தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

இன்றைக்குப் பல பேர், புதிது புதிதாகக் கட்சி துவங்குகின்றனர். இவ்வளவு நாட்கள் இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர். இன்றைக்கு காலம் போன காலத்தில், நதிகளை இணைக்கச் சொல்கின்றனர்.

காவிரி விசயத்தில் ஜெயலலிதா பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி, தற்போது முடியும் தருவாயில் உள்ளது. தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கம், அ.தி.மு.க.தான்

இவ்வாறு முதல்வர் பேசினார்.

Leave a Response