கண்ணகி கோயில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (ஏப் 21)தொடக்கம்.

 

மங்கல தேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பளியன்குடி ஆதிவாசிகள் குடியிருப்பில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (ஏப். 21) நடக்கிறது.

தமிழக – கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் மே 4ம் தேதியன்று சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது. கண்ணகி கோயிலுக்கு செல்ல கேரள மாநிலம், குமுளியிலிருந்து பாதுகாக்கப்பட்ட வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டிப் பாதையும், கூடலூர் அருகே பளியன் குழியில் இருந்து வனப்பகுதி வழியாக 6.6 கிமீ நடைபாதையும் உள்ளது.

விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் இருவாரங்களுக்கு முன்பாகவே பளியன்குடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் கொடிமரம் நட்டு பூஜைகள் செய்து, பக்தர்கள் மாலையணிந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து இரு வாரங்கள் விரதம் இருந்து பக்தர்கள் கண்ணகி கோயிலுக்கு சென்று வருவர்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள விழா, பளியன்குடி, ஆதிவாசிகள் குடியிருப்பில் இன்று (ஏப். 21) காலையில் கண்ணகி கோயில் அறக் கட்டளை சார்பில் கொடியேற்று விழாவுடன் துவங்குகிறது. பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், மாலையணியும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Leave a Response