ஐபிஎல்- பெங்களூருவை வென்றது மும்பை

ஐபிஎல் டி20 தொடரின் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்கள் எடுத்தது.

அணியின் தலைவர் ரோகித் சர்மா 52 பந்துகளில் 94 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரரான எவின் லிவிஸ் 42 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனையடுத்து பெங்களூரு அணி 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்தொடங்கியது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

Leave a Response