ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபருக்கு அவமரியாதை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கும் தமிழக ஆளுநருக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கிறதெனப பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆளுநர். அப்போது திவீக் ஆங்கிலப் பத்திரிகையின் செய்தியாளர் லட்சுமிசுப்பிரமணியனின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அவர் கன்னத்தைத் தடவியிருக்கிறார். என்முகத்தைப் பலமுறை கழுவிவிட்டேன் ஆனாலும் அருவெருப்பாக இருக்கிறது என்று அவர் சொல்லியிருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பின்போது நடந்தது என்ன? என்பது பற்றி பிபிசி செய்தியாளர் முரளிதரன் எழுதியுள்ள குறிப்பில்…..

ஆளுனரின் செய்தியாளர் சந்திப்பில் எனக்கு அடுத்ததாக நியூஸ் 7ன் லாவண்யாவும் அதற்கு அடுத்ததாக தி வீக் இதழின் லக்ஷ்மியும் அமர்ந்திருந்தார்கள்.

நிர்மலா தேவி விவகாரத்தையடுத்து கிட்டத்தட்ட ஒரு கட்டாயத்தின் பேரில் செய்தியாளர்களைச் சந்திக்கவந்த ஆளுனர், இந்த விவகாரத்தை எடுத்தபோதெல்லாம் கோபமடைந்தார். “நான் கொள்ளுப் பேரன் பேத்திகளையெல்லாம் எடுத்துவிட்டேன்” என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டுக்கு அவரது பதிலாக இருந்தது.

கிட்டத்தட்ட செய்தியாளர் சந்திப்பு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், லக்ஷ்மி கேட்ட கேள்விக்கு எதையும் சொல்லாமல் போயிருக்கலாம். அல்லது பதில் சொல்லியிருக்கலாம். பதிலாக கன்னத்தைத் தட்டிவிட்டுச் சிரித்தார். அது மிக அருவெருப்பாக இருந்தது. லக்ஷ்மி நியாயமாகவே கோபமடைந்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பு முழுக்கவே அவர் தன் பேரன் – பேத்திகளை டீல் செய்வதைப்போலவே செய்தியாளர்களை டீல் செய்ய விரும்பினார். ஆனால், தொடர்ந்து செய்தியாளர்கள் அதே விவகாரம் குறித்துக் கேட்டபோது கடுப்படைந்தார்.

ஒரு செய்தியாளர் சந்திப்பில், கேள்வி கேட்பவரும் பதில் சொல்பவரும் சமமான நிலையிலேயே இருக்கிறார்கள். புரோகித் எங்களை பேரன், பேத்திகளாக எங்களை நினைத்திருக்கலாம். ஆனால், நாங்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு ஆளுனரை கேள்விகேட்கவே வந்திருந்தோம்.

இந்தப் பின்னணியில் லக்ஷ்மியிடம் ஆளுனர் நடந்துகொண்டவிதம் மிகமிக அருவெருப்பானது.

Leave a Response