நான் பலாத்காரம் செய்யப்படலாம் – பதறும் பெண் வழக்கறிஞர்

காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 காவல்துறையினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ஆசிஃபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் குரல்கள் பெருகி வருகின்றன.

இந்த நிலையில் ஆசிஃபா சார்பாக வாதாடவிருக்கும் வழக்கறிஞர் தீபிகா ராஜாவத் தனது உயிருக்கு ஆபத்து என்று பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது,

நான் எப்போது வரை உயிருடன் இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் பலாத்காரம் செய்யப்படலாம். கொல்லப்படலாம். நான் நேற்று கூட மிரட்டப்பட்டேன். நான் நான் ஆபத்தில் இருப்பதை உச்ச நீதிமன்றத்திடம் முறையிட உள்ளேன்

என்று தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்காக பாஜக ஆதரவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response