மன்னித்துவிடு மகளே – கமல் உருக்கம்

இந்தியாவை அதிரவைத்துள்ள, காஷ்மீரில் நடந்த சிறுமி ஆஷிபா வன்புணர்வுக் கொலைக்கு கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அவள் உங்கள் மகளாக இருந்தால் தான் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா? அவள் என்னுடைய மகளாகவும் இருந்திருக்கலாம். அசிபாவை பாதுகாக்க தவறிய ஒரு மனிதனாக, தந்தையாக, ஒரு குடிமகனாக எனது கோபத்தை வெளிப்படுத்துகிறேன்.

போதிய பாதுகாப்பை உனக்கு அளிக்கத்தவறிய இந்த நாட்டை மன்னித்து விடு மகளே. குறைந்தபட்சம் உன்னைப்போன்று எதிர்காலத்தில் எந்தக்குழந்தைக்கும் இப்படி நடக்காமல் இருக்க தொடர்ந்து போராடுவேன். உனக்கு எங்களின் அஞ்சலி. உன்னை மறக்க மாட்டோம். இவ்வாறு கமல் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response