அமைச்சர் ஜெயக்குமாருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப் பட்டிருப்பதற்கும் தமிழக அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக் குழுவின் தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் இருந்துள்ளார்.இக்குழுவினர் ஆளுநருக்கு பரிந்துரை செய்த மூவரில் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை சேர்த்ததை தமிழக அரசின் பிரதிநிதி எதிர்த்து நீக்கி இருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் விட்டதின் விளைவாகவே ஆளுநர் எ.கே.சூரப்பாவை நியமிப்பததற்கு தமிழக அரசு உதவியுள்ளது.

இத்தகைய அநீதி தமிழகத்திற்கு இழைக்கப்பட்டதை தமிழர்கன் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Leave a Response