தமிழீழத்தில் எச்.ராஜாவின் உருவப்படம் எரிப்பு

மலேசியாவில் இருந்து வெளிவரும் ‘வல்லினம்’ இலக்கிய இதழின் 100ஆவது இதழ் தொடர்பான அறிமுக உரையாடல்,தமிழீழத்தின் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் 23.3.2018 அன்று மாலை நடைபெற்றது.

அப்போது மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் தலைவர் கணேசன் திலிப்குமார் கூறியதாவது:

கண்டியில் நடைபெற்ற வன்முறைக்கும் தமது அமைப்பின் சார்பில் கண்டனத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புகள் நடைபெற்றதற்கு, தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கிறோம்.

அத்துடன், இச்செயலுக்கு காரணமான இந்திய பாரதீய ஜனதா கட்சியின் செயலாளரான எச்.ராஜாவின் உருவப்படம், ‘மங்கல’ விளக்கேற்றலுக்குப் பதிலாக எரியூட்டி எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் எங்களது நிகழ்வினை ஆரம்பித்துள்ளோம்.

தமிழகத்தில் பெரியாருடைய சிலை உடைக்கப்பட்டாலும், இலங்கையின் மட்டக்களப்பில் முதலாவது பெரியார் சிலையினை விரைவில் அமைக்கவுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து எச்.ராஜாவின் உருவப் படம் தீயிட்டு எரிக்கப்பட்டது.

Leave a Response