ஒரு புகைப்படத்தால் கடும் விமர்சனங்களைச் சந்திக்கும் ரஜினி

ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.

சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்துக்குக் கேட்டை உண்டாக்கும் இரசாயனம் கலந்த வண்ணப்பொடிகளைப் பூசிக்கொள்வதே ஹோலி.

வட இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆண்களும், பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறன்றனர்.

சென்னையில் சவுகார் பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட
வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் ஹோலி பண்டிகையை அம்மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த்தும் தனது குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

அந்தப் புகைப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “காலா சூப்பர் ஸ்டாரான என் அப்பாவுடன் ஹோலியை கொண்டாடி வருகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ரஜினி வெறுமனே நடிகர் என்றில்லாமல் இப்போது அரசியலிலும் நுழையவிருக்கிறார்.

தமிழகத்தில் இதுவரை ஹோலி பண்டிகையை எந்த நடிகரும் அர்சியல்தலைவரும் கொண்டாடியதில்லை. இரண்டுமாகவும் இருக்கும் ரஜினி ஹோலி கொண்டாடியது தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ்ப்பண்பாட்டுக்கு எதிரானது என்பதால். இவர் எப்படி தமிழ்நாட்டில் அரசியல் தலைவராக முடியும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

Leave a Response