கமல் ஒரு டுபாக்கூர் – மனுஷ்யபுத்திரன் கடும் சாடல்

கமல் கட்சி ஆரம்பிக்கும்போது இதுவரை உளறியதைவிட பயங்கரமாக உளறுவார் என்று அதற்கு முந்தையைய தினம் நியூஸ் 18 நேரலையில் பதிவு செய்தேன். என் அனுமானத்தை அவர் ஒரு துளிகூட பொய்யாக்கவில்லை. மக்கள் கேட்டதாக பாரதிகிருஷ்ணகுமார் மேடையில் கமலிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்த விதம் ஒரு மாபெரும் அவல நாடகம்.

இவ்வளவு அரசியல் பேசப்படும் ஒரு மாநிலத்தில் எதைப்பற்றியுமே ஒரு குறைந்த பட்ச அறிவும் இல்லாத ஒருவர் முன்னிறுத்தப்படுவது மிகப்பெரிய அவமானம். நீட் பற்றியும் புதிய கல்விக்கொள்கை பற்றியும் நாம் போராடிக்கொண்டிருக்கும்போது ‘நல்ல பள்ளிக்கூடங்கள் வேண்டும்’ என் று பேசுவதற்கு ஒரு அசட்டுத்துணிச்சல் வேண்டும். தமிழகத்தில் காமராஜரும் அதற்கு பின்திராவிட இயக்கமும் வளர்த்த கல்விபற்றி அவருக்கு கைதட்டுபவர்களுக்கு ஏதாவது தெரியுமா?

‘நான் எந்த சித்தாந்தையும் பின்பற்றவில்லை…எல்லா சித்தாந்தத்திலிருந்தும் நல்லதை எடுத்துக்கொள்வேன்’ என்று பேசுகிற ஒருவருக்கு சித்தாந்தம் என்றால் என்னவென்று புரியவைக்க முடியுமா? மோடியையும் பிரனாய் விஜயனையும் சமமாக பாவிக்கும் ஒருவரை தமிழகம் பெற்றதன் தவப்பயனை என்னவென்று சொல்வது?

இலவசங்களை எதிர்த்துப் பேசுகிறார். இலவசங்களுக்கும் சமூக நலக்கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி எந்த அறிவும் இல்லாத ஒருவர்தான் இப்படி பேச முடியும். இலவசங்களை எதிர்ப்பவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள், மானியங்களை எதிர்ப்பவர்கள் அனவருடைய முகமும் வலதுசாரி பொருளாதார முகம்தான்.

‘ தமிழ் நாட்டில் தமிழ் அழிகிறதே ‘ என்று கேட்டால் ‘ எல்லோரும் நல்லா தமிழ் பேசுங்க ‘ என்கிறார். மொழி உரிமைக்காக ரத்தம் சிந்திய மாநிலத்தில் இப்படி ஒரு மொழிக்கொள்கையை ஒருவர் பேசுகிறார்.

‘ தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கிறதே? என் று கேட்டால் ‘ எல்லா பெண்களையும் உங்கள் அககா தங்கச்சியா நினைங்க ‘ என்கிறார்.

காவிரி பிரச்சினை பற்றிக் கேட்டால் ‘ கர்நாடகாவில் இருந்து தண்ணீர் என்ன ரத்தமே வாங்கித்தருகிறேன்…ஆள் ஆளுக்கு தூண்டிவிடாதீர்கள்..உட்கார்ந்து பேசுவோம்” என்கிறார். இந்தப்பிரச்சினையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியாத மூடர்கள் மட்டுமே இப்படி பேச முடியும்.

கமல் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். ஆனால் அவருக்கு நமது சமூகபிரச்சினைகளின் அரிச்சுவடிகூட தெரியாது என்பதன் சாட்சியமே நேற்றைய உரை. கமலஹாசனைபோலவே எந்த புரிதலுமற்ற டுபாக்கூர்கள் வேண்டுமால் இந்த உளறல்களுக்கு கைதட்டலாம்

கமலை யாரும் எதிர்க்க வேண்டியதில்லை. அந்த வேலையை நம்மைவிட அவரே சிறப்பாக செய்துகொள்வார்.

– மனுஷ்யபுத்திரன்

Leave a Response