விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்..!


நயன்தாரா வேற லெவல் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டதால், அடுத்ததாக உள்ள நடிகைகளில் நம்பர் ஒன இடத்தில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ் தான். அந்தவகையில் மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செயப்பட்டுள்ளார்.

இதற்கு முன் ‘பைரவா’ படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ள கீர்த்தி சுரேஷுக்கு இது அவருடன் இரண்டாவது படம். விஜய்யின் ஹீரோயின் சென்டிமென்ட் படி பார்த்தால், இதையும் தாண்டி அவருடன் கீர்த்தி சுரேஷ் மூன்றாவதாக ஒரு படம் நடிக்கலாம் என்பதற்கு கூட வாய்ப்பிருகிறது.

Leave a Response