எங்களை மொட்டையடிக்க வருகிறீர்களா? – மலேசியாவில் ரஜினி,கமலுக்குக் கடும் எதிர்ப்பு

நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் இன்று நட்சத்திரக் கலைவிழா நடக்கிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டிடம் கட்டுவதற்காக திரைத்துறையினர் கலந்துகொள்ளும் கலை நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவைகளை நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மலேசியாவில் உள்ள புக்கிஜாலி ஸ்டேடியத்தில் நடக்கும் நட்சத்திரக் கலைவிழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

காலை 10 மணிக்கு தொடங்கும் கலை நிகழ்ச்சிகள், இரவு 10 மணி வரையிலும் பல்வேறு பிரிவுகளில் நடக்கிறது.நடன நிகழ்ச்சிகள்,நகைச்சுவை நிகழ்ச்சிகள், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி ஆகியவை இதில் இடம்பெறும்.

இந்நிகழ்ச்சிக்கு மலேசியாவில் எதிர்ப்பு வந்துள்ளது. இது தொடர்பாக தமிழர் தேசிய அறநெறிக்கழகம் என்கிற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,,

ஆன்மிக அரசியல் ரஜினி! நாத்திக அரசியல் கமல் பணக்கார பிச்சை நடிகர்கள்?

நடிகர் சங்கக் கட்டிட நிதி திரட்ட மலேசியா வருகிறார்கள். ஒரு படத்திற்கு இவர்கள் வாங்கும் சம்பளம் 30 கோடி.

மலேசியா ரிங்கிட் 210மில்லியன் (2100 இலட்சம்) சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தன் தாய் மாநிலமான கர்நாடகாவில் பல தொழிற்சாலைகளும் சொத்துக்களும் வாங்கி அங்கும் ஆண்டிற்கு சராசரி 110கோடி வருமானமாம்.

இவ்வளவு சம்பாதித்து இவரால் அக்கட்டிடத்தை மீட்க முடியாத இவரும் கூட வரும் நடிகர் கூட்டமும் ஏமாளி மலேசியர்களை மலேசிய இந்தியன் காங்கிரஸை(ம இ க) போல மொட்டையடிக்க வருகிறார்கள்.

அன்பான மலேசியர்களே நமக்கு வெட்கம், மானம், ரோசம் இருந்தால் அந்நிகழ்ச்சிக்குப் போகாமல் நாம் அறிவாளிகள், ஏமாளிகள் அல்ல என நிரூபிக்க வேண்டும்.

சினிமாதான் இந்த தமிழ் இனத்தை அழிக்க ஆரியப்பய வைத்திருக்கும் ஆப்பு.

தமிழகத்தை விழுங்கும் திராவிட பி்சாசு

தமிழர்தேசிய அறநெறிக் கழகம்
மலையகம்
கோலாலம்பூர்
6/1/18

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response