மகாராஷ்டிரா மாபெரும் கலவரத்துக்கும் ரஜினிக்கும் சம்பந்தம் ? – அதிரவைக்கும் புதிய செய்தி

மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள, பீமா கோரேகாவ்ன் என்ற பகுதியில், 1818 -ம் ஆண்டு நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் பங்கேற்றனர். அந்தப் போரின் 200-வது வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது, தலித்மக்களுக்கும், மராத்தா இன மக்களுக்கும் இடையே மோதல் வன்முறையாக மாறியது. ஓர் இளைஞர் உயிரிழந்தார். இந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது. இந்த கலவரத்தில் போலீஸ் வேன் உள்பட 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால், புனே நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார்.

வன்முறையைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, மராட்டிய மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகளில் அமர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா-மும்பை இடையேயான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மும்பையில், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஓடாத காரணத்தால் பயணிகள் பரிதவித்தனர். நல்சோபரா ரயில் நிலையத்தில், போராட்டாக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராடியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு எக்ஸ்பிரஸ்வே சாலையை போராட்டக்கார்கள் மறித்துள்ளதால், அங்கு போக்குவரத்து முடங்கியுள்ளது.

அங்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி பசுமைதாயகம் அருள் எழுதியுள்ள குறிப்பில்….

நடிகர் ரஜினியின் முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு போரில் வெற்றி பெற்றதை மராட்டிய மாநில தலித் மக்கள் நேற்று கொண்டாடியதாலும், SC/ST வன்கொடுமை சட்டத்தலும், அங்கு நேற்று பெரும் கலவரம் நடந்தது. ஒருவர் கொல்லப்பட்டார். 200 கார்கள் கொளுத்தப்பட்டன!

இன்றும் தலித் சமூகத்தினர் மும்பையில் சாலை மறியல் செய்ததாலும், அதற்கு எதிராக மராத்தா சமூகத்தினர் புனே நகரில் சாலை மறியல் செய்ததாலும், மராட்டிய மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய வெற்றிக்கும், மேற்கு இந்திய பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி அமைவதற்கும் வழிவகுத்தவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்களான கெய்க்வாட்கள் ஆகும்.

1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் படைக்கும், மராட்டிய பேஷ்வாக்களின் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர். இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்காகப் போரிட்டவர்கள் மராட்டிய மாநிலத்தின் மகர் சமூகத்தினர் ஆகும். இவர்கள் கெய்க்வாட் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இந்த வெற்றியை பெரும் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இந்தக் கொண்டாட்டத்தில் தான் தற்போது தலித்துகளுக்கும் மராத்தா சமூகத்தினருக்கும் இடையே கலவரம் நடக்கிறது.

வாது எனும் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீரசிவாஜியின் மகன் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில், “இறுதிச் சடங்குகளை செய்தவர் கோவிந்த் கோபால் கெய்க்வாட்” என்று தலித் பெயரை குறிப்பிடப்பட்டது தொடர்பாக மோதல் எழுந்தது. இந்த மோதலில் 49 மராத்தா சாதியினர் மீது SC/ST வன்கொடுமை சட்டம் பாய்ந்தது. இதுவும் வன்முறைக்குக் காரணம் என்கின்றனர்.

(நடிகர் ரஜினி காந்தின் உண்மைப் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்பது குறிப்பிடத்தக்கதாகும்)

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response